[
    "தாயின் கண்களில் இல்லாத கடவுள் வேறு எங்கு இருக்கப் போகிறார்.",
    "ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்டு பிறகு பின் வாங்கக் கூடாது.",
    "உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பிறகு உலகமே உங்கள் வசமாகும்.",
    "நீ வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குத் தள்ளி விடும்.",
    "கடமையில் கண்ணாயிருந்தால் கடவுளுக்குச் செலுத்தும் முதல் பிரார்த்தனை.",
    "புத்தியுள்ள மனிதர்களுடன் சேருபவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர்.",
    "ஊக்கம்தான் மிகப்பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.",
    "உழைப்பால் உடல் நலமும் உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.",
    "தோல்வியைவிட இன்று வளர்ந்தோம் என்ற நம்பிக்கையே வெற்றி ஆகும்.",
    "உழைக்கவும் அதன்பின் விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.",
    "நீங்கள் கடமையைச் செய்யும்போது உங்கள் தகுதி தெரிந்துவிடும்.",
    "அமைதியில்தான் உயர்வும் உணர்வும் உள்ளது படையில் அல்ல.",
    "பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.",
    "கீழான லட்சியத்தில் வெற்றிகாண்பதைவிட உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பதே சிறந்தது.",
    "நேரில் உன்னைப் பார்த்து பயப்படுகிறவன் இல்லாத போது உன்னை வெறுப்பான்.",
    "புனிதமான செயல்களில் வாழ்வதுதான் புகழ் எனப்படுகிறது.",
    "நம்முடைய பாதுகாப்பிற்காக நாம் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.",
    "பேச்சில் இனிமை! கொள்கையில் தெளிவு! செயலில் உறுதி இம்மூன்றும் உள்ளவன் எதையும் சாதிக்கலாம்.",
    "ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன் வாழும் முறையில் உள்ளது.",
    "நாணயமாக இருப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும் அஞ்சுவதில்லை.",
    "ஒருவரது செயலை வைத்தே அவரது தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.",
    "சமுதாய தொண்டர்கள் நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.",
    "தூய்மை, வலிமை உள்ளவன், உலகத்தையே எதிர்கொள்ளலாம்.",
    "நாம் உலகத்தைத் தவறாக உணர்ந்து கொண்டு அது நம்மை ஏமாற்றுவதாகக் கூறுகிறோம்.",
    "சகோதர வளர்ச்சி தோன்றாதவரை வேற்றுமை உணர்ச்சி இருந்து கொண்டேதான் இருக்கும்.",
    "சுயமரியாதை இல்லாமல் வாழ்வதும் வாழ நினைப்பதும் மிகப்பெரிய அவமானமாகும்.",
    "கடுமையான உழைப்புதான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.",
    "தியாகமே உருவானவள் பெண். அவள் முறையாகச் செய்தால் மலையையும் நகர்த்தி விடுவாள்.",
    "பிறர் பணத்தை விரும்புகிறவனுக்கு கடவுள் நண்பராக இருக்க மாட்டார்.",
    "அகிம்சை மாபெரும் நல்லொழுக்கம்; கோழைத்தனம் மாபெரும் கேடு.",
    "தன் வலிமையைக் கணித்தபின்னரே செயலில் ஈடுபட வேண்டும்.",
    "நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் தலையாய முதல் கடமை.",
    "தளராத இதயத்தை உடையவனுக்கு இவ்வுலகில் முடியாது என்று எதுவுமில்லை.",
    "பிறவித்திறமையை வளர்ப்பதற்காகவே கல்வித் திறமை பயன்பட வேண்டும்.",
    "ஒருவனிடம் அச்சம் கொண்டால் அவனிடம் அன்பு கொள்ள முடியாது.",
    "எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பணிவுதான் உறுதியான அடித்தளமாக இருக்கிறது.",
    "மனிதன் முடிந்ததைச் செய்கிறான்; கடவுள் விரும்பியதைச் செய்கிறான்.",
    "பெரியோர்களை வணங்குவதே அடக்கத்தின் அடிப்படை பண்பு.",
    "எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே மனிதனைத் தவிர.",
    "மேன்மையை நாடிச்செல்பவனுக்கு சிறு குறைகளும் இருக்காது.",
    "வெற்றியும் தோல்வியும் சமமாக பாவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.",
    "ஒரு மனிதனை தெரிந்து கொள்வது என்பது அவன் முகத்தைப் பார்த்து அல்ல அவன் இதயத்தை.",
    "ஆலோசனைக்குப் பிறகே எல்லா செயல்களையும் தொடங்க வேண்டும்.",
    "உயிரைக் கொடுத்தேனும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.",
    "நியாயத்துடன் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.",
    "நல்ல எண்ணம் கொள்வது இறைவழிபாட்டின் ஓர் அங்கமேயாகும்.",
    "நடந்ததற்காக வருந்தாமல் முடிந்ததற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.",
    "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு பண்பு உண்டு.",
    "அகரமும் நாணமும் அறிவில்லாதவர்க்கு இல்லை.",
    "உன் அயலானை நேசி; ஆனால் வேலியை எடுத்துவிடாதே.",
    "சத்திய நெறியை அறிந்து அதைப் பின்பற்றத் தவறுபவன் கோழை.",
    "சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.",
    "தூண்டுதல்களை வெல்வதே தூய்மையின் இரகசியம்.",
    "அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதும் கொடுத்த வட்டியையத்தரும்.",
    "ஏழையின் முகம் மலரும் போது இறைவனின் உள்ளமும் மலர்ச்சி கொள்கிறது.",
    "சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.",
    "கௌரவமும் தாழ்மையும் பண சக்தியைப் பொறுத்தே இருக்கிறது.",
    "நீ பழக்கப்பட்டுவிட்டால் தீமைகூட நன்மையாகத்தான் தெரியும்.",
    "சாதனைகளை மட்டும் நாடறிய செய்ய வேண்டும்.",
    "அறிவாளிகள் மற்றவர்களின் கேடுகளிலிருந்தே பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.",
    "சத்தியம் உள்ள இடத்தில்தான் மெய்யறிவு இருக்கும்.",
    "தர்மம் நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது.",
    "மனதைத் தூய்மைப் பெறும் வழி ஆசைகளைக் குறைத்துக் கொள்வதுதான்.",
    "காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு காலம் ஒவ்வொரு கதவையும் திறக்கிறது.",
    "எல்லா வேதங்களின் சாரமும் வலிமை என்கிற சொல்தான்.",
    "புகழை விரும்பாத பொதுநலத் தொண்டன் எவனோ அவனே உத்தமன்.",
    "உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.",
    "மனிதன் எண்ணத்தை மீறியும் காலச்சக்தி வேலை செய்வதுண்டு.",
    "பிறரை மதிக்கத் தெரிந்த மனிதனைத்தான் சமுதாயம் மதிக்கும்.",
    "இறைவனின் இருப்பிடமாகவும் நல்லவர்களின் உறைவிடமாகவும் அமைவதுதான் சொர்க்கம்.",
    "சிறிய காரியத்தையும் ஒருவன் மிகுந்த மரியாதையுடன் செய்ய வேண்டும்.",
    "கிடைத்ததைக் கொண்டு வளமான வாழ்க்கை நடத்தும் கலையே சிக்கனம்.",
    "சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டால் மனிதனின் வெற்றிப்படிகள் உயரும்.",
    "பகைமையை அன்பினால் மட்டுமே வெல்லமுடியும்.",
    "நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கள் என்றுமே அழிவதில்லை.",
    "கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்புவதில்லை.",
    "உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் சிற்பி நீங்கள்தான்.",
    "அவநம்பிக்கை கொள்வதை நிறுத்தினால் உங்கள் பயமும் நின்றுவிடும்.",
    "வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நிதானத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.",
    "தன் நடத்தை அளவுக்கு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.",
    "வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவமுடியாது. குறைந்த பட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்.",
    "உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன் ஒப்புக் கொள்ளுங்கள்.",
    "நாம் வாழ்க்கையில் முன்னேறும் பொழுதுதான் நம் திறமைகளின் எல்லைகளைக் கற்றுக்கொள்கிறோம்.",
    "மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன்னுடைய சொந்த வாழ்க்கையை அனுபவி.",
    "அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை மனித குலத்துக்கும் பெருமை கொடுக்கும்.",
    "மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது வெற்றியல்ல சோதனைதான்.",
    "தொந்தரவிலிருந்து வெளியே வருவதைவிட தொந்தரவிலிருந்து விலகி இருப்பது எளிது.",
    "மிதமான செல்வம் உன்னைச் சுடும் மிதமிஞ்சிய செல்வத்தை நீ சுமக்க வேண்டும்.",
    "மழை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.",
    "அறிவே நல்ல மனிதனைத் தொடங்கி வைக்கிறது. ஆனால் அதுவே அவனை முழுமை அடையவைக்கிறது.",
    "படிக்கும் போது கட்டுப்பாடோடிருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக இருக்கலாம்.",
    "வழிவகை அறிந்து செயல்படும் ஒருவனுக்கு செய்ய முடியாதது எதுவுமில்லை.",
    "மனவலிமை மட்டும் இருந்தால் போதாது. அதை நல்ல விதமாகப் பயன்படுத்தவும் வேண்டும்.",
    "புகழ், கடுமையான உழைப்பு, அதிகாரம் அதிகமான வேதனை.",
    "உழைத்து சம்பாதித்தப் பொருளுக்கு எப்போதும் மதிப்பு அதிகம்.",
    "முன்னேற்றம் என்பது இன்றைய செயலாக்கம் நாளைய உறுதிநிலை.",
    "நம்முடையது மட்டுமே பெருஞ் சுமை என்ற எண்ணம் தவறானது.",
    "சிறந்த பணிவே அறிவுடைமையின் உயர்ந்த அடையாளம்.",
    "தேவைக்கேற்ற ஊதியம் என்பதே பொருளாதார சமத்துவத்தின் சரியானப் பொருளாகும்.",
    "வெறும் நற்பண்பு மட்டும் அதிகப் பயணத்தைத் தராது. நல்லறிவும்சேர வேண்டும்.",
    "செயல்படும் முறையை முன்னால் தீர்மானித்துக் கொண்டுதான் செயலைத் தொடங்கவேண்டும்.",
    "வாழ்க்கை தேர்வில் காப்பி அடிக்க முடியாது; ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.",
    "அமைதியும் அறிவுத்தெளிவும் இல்லாதவனால் பணிகளைச் செய்து முடிக்க இயலாது.",
    "தம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்பவரிடம் உரிமைகள் தாமாகவே வந்து சேருகின்றன.",
    "தகுதியும் உழைக்கும் நேரத்தையும் அதிகரித்துக் கொள்பவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.",
    "ஒரு மனிதனிடம் அவனைப் பற்றிப்பேசினால் அவன் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பான்.",
    "பொறுமை மிகுந்த மனிதனின் கோபத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.",
    "மனத்தின் தன்மையே மனிதனின் தன்மை; மனத்தின் மாண்பே மனிதனின் மாண்பு.",
    "புகழ்ச்சி நல்லவனை மேலும் நல்லவனாக்கும்; கெட்டவனை மேலும் கெட்டவனாக்கும்.",
    "அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.",
    "காலத்தை வீணாக்குவது தன்னைத்தானே கொள்ளையடிப்பதற்குச் சமம்.",
    "தையந்தாரும் எழுத்தாளரும் காலத்திற்கேற்ப செயல்பட வேண்டும்.",
    "உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே உண்மையில் உனக்கு எதிரி.",
    "எண்ணத்தில் வேகமும் இயல்பும் அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம்.",
    "மன ஒற்றுமையும் நோக்கத்தால் ஒற்றுமையும் இல்லாவிட்டால் அதைவிட வேற்றுமை வேறில்லை.",
    "விழிப்புணர்வுடன் இருந்து நமது தவறுகளைக் கண்டறிய வேண்டும்.",
    "மற்றவர்களின் பாராட்டைவிட அவர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்.",
    "ஏழ்மையைப் பார்த்து சிரிக்கிறவன் அதைத் தன் பக்கத்தில் இழுக்கிறான்.",
    "ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடு.",
    "வறுமையிலும் நிறைவுகாண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.",
    "இந்த பூமியில் வாழும் உரிமைக்காக தொண்டு என்ற வாடகையை நாம் கொடுக்கிறோம்.",
    "பகைமையை வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது; வாழ்த்தும் போது பகைமை நிற்காது.",
    "பண்பாடு ஆரவாரமற்றது அமைதியானது. தன்னை அறிவது தன்னடக்க முள்ளது.",
    "எல்லைகளை உண்டாக்குவது ஞானம். எல்லைகளை நீக்குவது தானம்.",
    "வார்த்தைகள் உடலை ஆட்சி செய்யும்; வார்த்தையிலுள்ள உணர்வு உள்ளத்தை ஆட்சி செய்யும்.",
    "பொறுமை மிகவும் கசப்பானவை அதன் விளைவுகள் இனிப்பானவை.",
    "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடித்துவை.",
    "திறமையான தச்சன் குறைந்த மரங்களையே வெட்டுகிறான்.",
    "நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு பயப்படுவதில் அர்த்தமில்லை.",
    "தகுதிக்குத் தக்கவாறு வாழாதவன் கவலைப்படுவான்.",
    "சத்தியத்திடம் பக்தி கொண்டவர்கள் உயர்ந்த கலைகளின் நுட்பத்தை அறிந்தவர்கள்.",
    "உன்னைத் தியாகம் செய்வதன் மூலமே பிறரது இதயங்களை வெல்லமுடியும்.",
    "கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன்பாதையும் வழுக்கல் உடையது.",
    "அன்பு வீணாகப் போய்விட்டது என்று சொல்ல வேண்டாம், அது வீணாவதே இல்லை.",
    "வார்த்தைகளில் குற்றம் உடையவன் சான்றோர்களால் இகழப்பட்டு தாழ்வு நிலைக்கு ஆளாகிறான்.",
    "உன்னைத் தவிர வேறுயாரும் உனக்கு அமைதியைத்தர முடியாது.",
    "எதிர்காலத்தைப் பயம் கொண்ட கண்களால் பார்ப்பது ஒரு போதும் பத்திரமானது அல்ல.",
    "பிறரிடம் நாம் கேட்காததால் அநேக விஷயங்களை வாழ்க்கையில் இழக்கிறோம்.",
    "நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை; நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.",
    "வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன.",
    "நன்மதிப்பை உடைமையாக்கிக்கொள்; அதைவிட அதற்குத் தகுதியானவை சிறப்பு.",
    "பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒரு நாளும் முன்னேற முடியாது.",
    "ஒரு பொய் பல பொய்களை உருவாக்குகிறது. அவர்கள்தான் சொன்னார்கள் என்கிறது பொய்யின் தம்பி.",
    "நேர்மையானவர் நம்பிக்கையால் வாழ்பவர். நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.",
    "சினத்தை அடக்குவது நல்லது; அதைவிடவாராமல் தடுப்பது இன்னும் நல்லது.",
    "கேட்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள்; செய்ய நினைப்பதையெல்லாம் சொல்லி விடாதீர்கள்.",
    "கடவுளைப் போல பிறர் குற்றங்களை பலமுறை மன்னிக்கப் பழக வேண்டும்.",
    "பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது.",
    "உண்மையான பாராட்டுதான் வாழ்க்கையில் உயர நல்ல ஊக்கத்தைத் தரும்.",
    "சுறுசுறுப்பு இல்லாதவன் சோம்பேறி மகனை உருவாக்குகிறான்.",
    "அதிர்ஷ்டத்தை நம்பாதே கடுமையான உழைப்புதான் வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.",
    "எதிரில் வராத வரையில் பயப்படத்தக்கவைப் பற்றி பயப்படு. எதிரில் வந்தபின்பு பயமின்றி பழகு.",
    "ஒரு சமுதாயத்தின் நம்பிக்கை தனிமனிதனின் ஒழுக்கமே.",
    "உச்சரிப்பின் அழுத்தம் மொழியின் ஆத்மா; அது உணர்வையும் உண்மையையும் கொடுக்கிறது.",
    "சிநேகிதர் நமக்கு வழி காட்டுபவர் நம்முடைய வழியிலேயே பயணம் செய்வார்.",
    "தவறு செய்யாத மனிதன் இல்லை, ஏதும் செய்யாதவனே தவறு செய்யாதவன்.",
    "நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் துன்பத்தைக் காண்கிறான்.",
    "நம்பிக்கை உள்ளவர்கள் துன்பத்திலும் வாய்ப்பை காண்கிறார்.",
    "செழுமை நண்பர்களை சேர்க்கிறது. கஷ்ட காலம் நண்பர்களைச் சோதிக்கிறது.",
    "உனது ஆத்மாவை விடச் சிறந்த ஆசிரியர் இல்லை.",
    "வேலையில் ஈடுபட்டவர்களுக்குக் கண்ணீர் விட நேரமில்லை.",
    "முன்யோசனைகள் உள்ளவன் வெளியே வருவதற்கும் வழியைத் தெரிந்து கொண்டுதான் உள்ளே நுழைகிறான்.",
    "தன்னைத்தானே சோதித்துக் கொள்பவன் தீமையிலிருந்து விலகிவிடுவான்.",
    "ஒவ்வொரு தொடக்கத்திலும் முடிவை கவனிக்க வேண்டும்.",
    "பை செல்வத்தால் நிறைவதைவிட மனம் சந்தோஷத்தால் நிறைவது மேல்.",
    "எதற்கும் துணிவில்லாதவன் எதையும் எதிர்பார்க்க முடியாது.",
    "பகிர்ந்தால் துன்பம் பாதியாகிறது சிரித்தால் இன்பம் இரட்டிப்பாகிறது.",
    "துருப்பிடித்து அழிவதைவிட உழைத்து அழிவதே மேல்.",
    "அன்பை அன்பினால் ஈடுசெய்; தீமையை நீதியினால் ஈடுசெய்.",
    "திறமை, ஏழையின் ஏழ்மையின், சொத்து தீயது பலவீனம்.",
    "கனவுகாண்பதுடன் காரியத்தில் இறங்குவதே சாதனைக்கான சாலை.",
    "வெற்றிக்கானப் பாதையில் தொடர்ந்து வேலை நடந்துவரும்.",
    "நல்ல நண்பர்கள் உள்ளவன் செல்வந்தன்.",
    "சுருங்கக் கூறவே அறிவின் ஆற்றல், பல சொன்னாலும் மக்கள் மனதில் சிலதுதான் நிற்கும்.",
    "நிச்சயமாக நன்மை விரையும் என்று உணர்ந்தாலன்றி உள்ளத்தில் உள்ளதை வெளியிடாதே.",
    "நேரத்தை கொல்வதாக மனிதன் சொல்வான் ஆனால் மனிதனை நேரம் தான் கொல்லுகிறது.",
    "சிறிய உதவிகளை மறுக்காதே; ஆனால் சிறிய தவறுகளை மறந்துவிடு.",
    "காணாப் பொருளின் சான்றாகவும் கருதிப் பொருளின் உயிராகவும் இருப்பது நம்பிக்கை.",
    "வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும். இன்பச் சிரிப்பே இல்லத்தின் ஒளி.",
    "பிறவிளக்குகளை ஏற்றி தன்னையே அழித்துக் கொள்வதுதான் மெழுகுவர்த்தி.",
    "பணத்தை கடன் கொடுத்தால் நட்பை இழப்பாய் கடன் கொடுப்பது பகை வளர்க்கும்.",
    "உண்மையோடு கூடிய நடத்தையின் மூலமே உண்மையை அடைய முடியும்.",
    "தன் நடத்தையின் அளவுக்கு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.",
    "பெண் திருமணத்திற்கு முன் அழுகிறாள். ஆண் திருமணத்திற்குபின் அழுகிறான்.",
    "ஆயிரம் நூல்களிலிருந்து பெறமுடியாத ஞானங்களை ஓர் அனுபவம் உணர்த்தும்.",
    "செல்வங்கள் கஷ்டப்பட்டு தேடப்படுகின்றன அதை கவலையோடு காக்கப்படுகின்றன.",
    "தந்தையின் அன்பு சுடுகாடு வரைதான். ஆனால் தாயின் அன்பு என்றும் உண்டு.",
    "நூல்கள் உள்ளதை உள்ளபடி உரைக்கும் ஆலோசகர் அதற்குவர்ணம் சேர்ப்பர்.",
    "வாழ்க்கை முக்கியமல்ல வாழ்க்கையில் நீ காட்டும் மன உறுதிதான் முக்கியம்.",
    "ஒரு நல்ல புத்தகம் தலை சிறந்த ஆன்மாவின் விலை மதிப்பற்ற உடம்பின் துடிப்பு.",
    "தவறு செய்து திருந்துபவன் தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்து விடுகிறான்.",
    "உன்னை எந்த வேலையை செய்கிறதோ அதை முழுவலிமையுடன் செய்.",
    "உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் போது அறியலாம்.",
    "பணத்திடம் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையிடம் பணத்தை போட்டுவை.",
    "முயல் வெற்றி அதன் காலடியில்; மனிதனின் வெற்றி அவன் தன்னம்பிக்கையில்.",
    "கட்டளைகள் வழிகாட்டும் ஆனால் முயற்சிதான் வழி நடத்திச்செல்லும்.",
    "சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும்.",
    "மிகப் பெரிய நோக்கத்தைக் காட்டிலும் மிகச் சிறிய செயல் மேலானது.",
    "வெறுப்பைக் காட்டுவது அரக்க குணம் மன்னிப்பது மனித குணம்.",
    "வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலன்களை அளிக்கும்.",
    "இளமையில் திறமை திசைமாறிடின் வாழ்வின் வளமை தடுமாறிவிடும்.",
    "தீர்த்துவைப்பதே பிரச்சனையிலிருந்து தப்புவதற்கு சிறந்த வழி.",
    "மென்மையான சொற்கள் எளிதில் செல்வத்தைக் கொண்டுவரும்.",
    "முடியாமைகள் மீது மோதிப் பார்க்க அறிவாளி எப்போதும் முயலமாட்டான்.",
    "நம்பிக்கை எதையும் துணிந்து செய்கிறது. அன்பு எதையும் பொறுத்துக் கொள்கிறது.",
    "உன்னுடைய பெற்றோர்கள் படும் இடர்பாடுகளை நினைத்துக் கொண்டே இரு. தானாகவே முன்னேறிவிடுவாய்.",
    "நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல எவ்வளவு நன்றாக வாழ்கிறோம் என்பதே முக்கியம்.",
    "எளிமையாக இருப்பதுதான் உண்மையாக வாழக் கற்றுக்கொடுக்கும்.",
    "பிறர் குறையைப் பார்க்கிறவன் தன் குறையை உணரமாட்டான்.",
    "தன்னைத்தானே ஆளத்தெரியாதவன் தனக்குத்தானே பகைவன்.",
    "காலத்தைத் தவிர வேறொன்றும் நமக்குச் சொந்தமில்லை.",
    "நியாய அறிவின் நாடித்துடிப்பு மனசாட்சி.",
    "போதனையை விட சாதனையே சிறந்தது.",
    "கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவன்தான் உண்மையான வீரன்.",
    "ஒவ்வொரு நாளும் ஒரு முழு வாழ்நாளுக்குச் சமம்.",
    "பணத்தை தியாகம் செய்; கொள்கையைத் தியாகம் செய்யாதே.",
    "வீரம் என்பது ஆற்றல் அல்ல உள்ளத்தின் பண்பு.",
    "அமைதியாக இருங்கள் எவரையும் வசப்படுத்தி விடலாம்.",
    "அறிவைவிட தைரியத்தினால் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.",
    "கோவில் உள்ளே செல்லும்போது உலகை வெளியே விட்டுச் செல்லுங்கள்.",
    "எதையும் எதிர் பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.",
    "உன்னுடைய கவலைகளை உன்னுடைய முழங்காலுக்கு மேலே போகவிடாதே.",
    "சந்தர்ப்பங்களே மனிதனை மாற்றுகின்றன.",
    "தந்தையின் புத்தி மதியைக்கேள் தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.",
    "அச்சமே மரணம். அச்சத்திற்குப்பால் நீ போகவேண்டும்.",
    "எந்த வேலையிலும் அவசரம் தோல்வியைக் கொண்டுவரும்.",
    "பேசுகிறவன் விதைக்கிறான் கேட்பவன் அறுவடை செய்கிறான்.",
    "தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.",
    "அறிஞர்களின் கூட்டம் ஓர் உயிருள்ள வாசக சாலை.",
    "அறிவுள்ள குழந்தை மகிழ்ச்சியுள்ள தந்தையை உருவாக்குகிறது.",
    "சுதந்திரமாக சிந்தி, நல்லதையே நினை, நல்லதையே செய்.",
    "பிரார்த்தனை நமது நம்பிக்கையை மேலும் உறுதி பெறச்செய்கிறது.",
    "உலகைத் திருத்த விரும்பினால் முதலில் உன்னைத் திருத்திக்கொள்.",
    "அகிம்சை கோழைகளின் ஆயுதமன்று; அது வீரர்களுக்கே உரியது.",
    "அந்நியர்கள் மன்னிக்கிறார்கள் நண்பர்கள் மறக்கிறார்கள்.",
    "முயற்சி இல்லாத நம்பிக்கை கப்பலில்லாத கடல்யாத்திரையைப் போன்றது.",
    "எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு ஆண்டவன் இருக்கிறான்.",
    "ஒருவன் முடிவு எடுத்துவிட்ட பிறகு புத்தி சொல்வது காலவிரயம்.",
    "தாயின் இதயம் குழந்தைகளின் பள்ளிக்கூடம்.",
    "அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவ மாட்டான்.",
    "ஏழ்மையும் உழைப்பும்தான் திருப்தியும் வெற்றியும் தருகிறது.",
    "உண்மை மகிமை பொருந்தியது. அதுதான் நிலைத்து நிற்கும்.",
    "நம்மால் முடிந்தவை எல்லாவற்றையும் செய்வதுதான் ஈகை.",
    "கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது அஞ்சத்தக்கது.",
    "உன் கடமையைச் செய் அப்போதுதான் உன் தகுதியை நீ அறிந்து கொள்ள முடியும்.",
    "பொறுமை மிகுந்த மனிதனின் கோபத்தில் எச்சரிக்கையாய் இருங்கள்.",
    "பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, உயர்ந்த பண்பின் அறிகுறி.",
    "நீ தியாக தழும்பு பெறாமல் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.",
    "அமைதியிலும் அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.",
    "அறியாமையிலிருந்து பிறப்பதே அச்சம்.",
    "ஆசையைவிட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது.",
    "காத்திருக்க கற்றிருப்பதே செயல் வெற்றிக்கு அடிப்படை.",
    "அதிருப்திகளுக்கு எல்லாமே சுய நலமே.",
    "வெல்ல முடியும் என்று நினைப்பவராலே தான் வெல்லமுடியும்.",
    "முயற்சியோடு நாம் கற்பதை நாம் ஒரு போதும் மறப்பதில்லை.",
    "பகைமை பகைமையினால் தணிவதில்லை அன்பினாலே தணியும்.",
    "பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான்.",
    "நல்ல நண்பனை நீ விரும்பினால் நீ நல்ல நண்பனாக இரு.",
    "அறிவு நம்மைக் காக்க வரும்போது நம்பிக்கையே உதவுகிறது.",
    "உழைக்கும் மனிதனே உயிர்வாழும் உரிமை உடையவன்.",
    "வீரமிக்க செயல்களின் நறுமணமே புகழ்.",
    "எந்தச் செயலிலும் வேகமும் விவேகமும் இருக்க வேண்டும்.",
    "நாம் நம் செயல்களை தீர்மானிக்கிறோம் நம் செயல்கள் நம்மை தீர்மானிக்கிறது.",
    "தான் கொடுப்பதை மறப்பதும் பிறரிடம் நலம் பெற்றதை நினைப்பதும் நட்பிற்கு அழகு.",
    "குழந்தையை சிந்திக்கும்படி தூண்டுவதே கல்வியின் குறிக்கோள்.",
    "நம்பிக்கை எதிர்காலத்திற்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்த காலத்திற்கு முலாம் பூசும்.",
    "அறிவு மௌனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத்தரும்.",
    "நேர்மையும் சத்தியமும் நல்ல பண்புக்கு அடிப்படை.",
    "சுயமாக சிந்தனை செய்யாதவன் அடிமை. சிந்திப்பவனே முன்னேறுகிறான்.",
    "தலை சிறந்த அறிவு என்பது இறுதியாக தீர்மானித்தலே.",
    "உற்சாகமாக இருப்பது ஆரோக்கியமாக வைத்திருக்கும்.",
    "சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றி நிச்சயம்.",
    "எல்லா நேரங்களிலும் பண்புடன் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.",
    "பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாகும்.",
    "உன் உள்ளம் எப்படியோ அப்படித்தான் உலகம்.",
    "அறிஞனைக் கேட்காதே; அனுபவசாலியைக் கேள்.",
    "மெதுவாக சிந்தனை செய்; விரைவாக செயல்படு.",
    "பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது.",
    "வாழ்க்கை வேண்டுமானால் நாட்களை வாங்க வேண்டும்.",
    "நூறு ஆசானுக்கு ஒப்பானவர் பொறுப்புமிக்க தந்தை.",
    "சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள் ஆனால் செயல்கள் தங்கத்துளிகள்.",
    "அறிவும் ஒழுக்கமும் வாழ்க்கையின் இருசக்கரங்கள்.",
    "குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் நேர்மையின் முதல் படி.",
    "அமைதியாக ஓடும் நீர் ஆழமாக இருக்கும்.",
    "ஞானம் பல பூட்டுகளைத் திறக்கும் ஒரே சாவிக்கு ஒப்பானது.",
    "செயல்களை கடினமாக்குவது சோம்பேறித்தனம்; அதை சுலபமாக்குவது உழைப்பு.",
    "எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள்.",
    "அச்சத்தை வெல்வதே முதல் வெற்றி.",
    "மனதை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.",
    "எல்லையில்லாத உற்சாகம் கொண்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்.",
    "மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்.",
    "துன்பத்தில் வடித்தெடுக்கப்பட்ட சாறுதான் அனுபவம்."
  ]